இன்றைய தினம் அமைச்சர் டளஸ் அழகப்பெரும பாடசாலையில்….
Related Articles
இன்றைய தினம் பாடசாலைகள் திறக்கப்பட்ட நிலையில் அமைச்சர் டளஸ் அழகப்பெரும மாலம்பே முன்மாதிரி ஆண்கள் வித்தியாலயத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். பாடசாலை நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கென அவர் விஜயம் மேற்கொண்டார். பாடசாலை கட்டமைப்பைச் சேர்ந்த எவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பதையிட்டு தான் பெருமை கொள்வதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும ஊடகங்களுக்கு தெரிவித்தார். இதற்கென பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோருக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். இதேவேளை பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பில் உரிய பிரிவினருக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.