fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நிதி நெருக்கடியை சமாளிக்க ஐபிஎல் தொடர் அவசியமென்கின்றார் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ் குமார்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 29, 2020 12:53

ஐபிஎல் தொடர் இவ்வாண்டு நிச்சயம் நடத்தப்படுமென இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ் குமார் தெரிவித்துள்ளார். நிதி பிரச்சினைகளை சமாளிக்க தொடரை நடத்துவது அவசியமென அவர் குறிப்பிட்டுள்ளார். 13வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 29ம் திகதி ஆரம்பமாகவிருந்தது. எனினும் கொரோனா பரவல் காரணமாக தொடர் காலவறையரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

அவுஸ்ரேலியாவில் ஆகஸ்ட் 18ம் திகதி முதல் நவம்பர் 15ம் திகதி வரை இடம்பெறவுள்ள ருவண்டி 20 உலககிண்ண தொடர் ஒத்திவைக்கப்பட்டால், ஐபிஎல் தொடரை நடத்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் புவனேஷ் குமார் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, போட்டியில் பந்தை பளபளப்பாக்குவதற்கென எச்சிலை பயன்படுத்துவதற்கு பதிலாக மாற்று பொருளொன்று அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஐசிசி உரிய தீர்வொன்றை எடுக்கமென எதிர்பார்ப்பதாகவும் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ் குமார் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 29, 2020 12:53

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo