fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தகுதியின் அடிப்படையில் மாத்திரமே இந்தியா அணிக்கு வீரர்கள் தெரிவு..

ITN News Editor
By ITN News Editor ஜூன் 29, 2020 12:08

தகுதியின் அடிப்படையில் மாத்திரமே இந்தியா அணிக்கு வீரர்கள் தெரிவு..

தகுதியின் அடிப்படையில் மாத்திரமே இந்தியா அணிக்கு வீரர்கள் தெரிவு செய்யப்படுவதாக அணியின் முன்னாள் வீரர் ஆகாஸ் சோப்ரா தெரிவித்துள்ளார். வீரர்களின் உறவினர், கிரிக்கட் நிர்வாகிகளின் உறவினர்கள் என்ற அடிப்படையில் அணியில் பங்கேற்பதற்கு எவருக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும வாய்ப்பு வழக்கப்பட்டதில்லை. எதிர்காலத்திலும் அவ்வாறு நடைபெறுவதற்கு வாய்ப்புக்கள் இல்லையென ஆகாஸ் சோப்ரா தெரிவித்துள்ளார். நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்காரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரும் இதற்கு சிறந்த உதாரணமாகும். சச்சினின் மகன் என்பதற்காக அவருக்கு கிரிக்கட் போட்டிகளில் எந்தவொரு விசேட வாய்ப்புக்களும் வழங்கப்படவில்லை. இந்தியா அணியிலும அவரால் இலகுவாக இடம்பிடிக்க முடியவில்லை. 19 வயதுகுட்பட்ட இளையோர் அணி வீரர் தெரிவிலும், கிரிகட் பிரபல்யங்களின் உறவினர்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்பட்டதில்லை. தகுதியின் அடிப்படையில் மாத்திரமே வீரர்கள் தெரிவு செய்யப்படுவதாக இந்திய வீரர் ஆகாஸ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 29, 2020 12:08

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க