fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கடிதங்களை கையளிக்கும் நபரொருவர் கைது

ITN News Editor
By ITN News Editor ஜூன் 28, 2020 20:22

பொலன்னறுவை பிரதேசத்தின் பல பகுதிகளில் கேரள கஞ்சா விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கடிதங்களை கையளிக்கும் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலன்னறுவை – பராக்கிரம சமூத்ர உப தபால் காரியாலயத்தில் பணியாற்றுக்கின்ற குறித்த நபர் கடிதங்களை பகரிந்தளிக்கும் போர்வையில் கேரளா கஞ்சா விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. பொலிஸாரால் அனுப்பப்பட்ட தூதுவர் ஒருவரால் குறித்த நபரின் குறித்த செயற்பாடு கண்டுப்பிடிக்கப்பட்டதாக பொலன்னறுவை பகுதி குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. அச்சந்தர்ப்பத்தில் குறித்த நபரினால் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த கேரளா கஞ்சா மீட்கப்பட்டதோடு அவருடைய வீட்டில் இருந்தும் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. சந்தேக நபரை பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 28, 2020 20:22

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க