fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மூடப்பட்ட பாடசாலைகள் நாளை திறப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 28, 2020 17:15

கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் 105 தினங்களின் பின்னர் நாளைய தினம் மீண்டும் திறக்கப்படவுள்ளன. எனினும் நாளைய தினம் அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், நிர்வாக குழுவினர் ஆகியோர் பாடசாலைக்கு வருகைத்தரவேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிருமி தொற்று நீக்கும் செய்தல், சுத்தப்படுத்துதல், பாடங்களுக்கான நேர அட்டவணையை தயாரித்தல் போன்ற பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

பாடசாலைகளை திறப்பதற்கான இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் அடுத்த மாதம் 6ம் திகதி ஆரம்பமாகவுள்ளன. அன்றைய தினம் தரம், 5, தரம் 11 மற்றும் தரம் 13 ஐ சேர்ந்த மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருகைத்தரவேண்டுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. தரம் 10 மற்றும் 12ம் தரங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் ஜுலை மாதம் 20ம் திகதி பாடசாலைகளுக்கு அழைக்கப்படவிருப்பதாக கல்வியமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 28, 2020 17:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க