fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மடுமாதா ஆலய திருவிழாவுக்கு ஆயிரம் யாத்திரீகர்களுக்கு மாத்திரமே அனுமதி…

ITN News Editor
By ITN News Editor ஜூன் 28, 2020 20:45

மன்னார் மடுமாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் பங்கேற்பதற்கு ஆயிரம் யாத்திரைகளுக்கே அனுமதி வழங்கப்படுமென மன்னார் மறைமாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய கலாநிதி இம்மானுவேல் பெர்ணான்டோ அருட்தந்தை தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் 2ம் திகதி திருவிழா திருப்பலி இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் ஆலயத்திற்கு யாத்திரீகர்கள் வந்து செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருவிழா திருப்பலியில் ஆயிரம் பேர் மாத்திரமே பங்கேற்க முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார். திருவிழா திருப்பலியை தொடரந்து காலை 08.30க்கும் முற்பகல் 10.30க்கும் இரு திருப்பலிகள் இடம்பெறவுள்ளன. இந்நிலையில் ஆலயத்திற்கு வருகைத்தருவோர் சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிப்பதுடன் பொலிஸாரின் பணிப்புரைகளுக்கும் கீழ்ப்படியவேண்டுமென மன்னார் மறைமாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய கலாநிதி இம்மானுவேல் பெர்ணான்டோ அருட்தந்தை அறிவுறுத்தியுள்ளார். சமூக இடைவெளியை பின்பற்றி திருவிழாவில் யாத்திரீகர்கள் கலந்துகொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 28, 2020 20:45

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க