தேசிய சினிமாத்துறையை கட்டியெழுப்புவதற்காக வழங்கப்படும் நிவாரணத்தை இம்முறை வரவு செலவு திட்டத்தினூடாக பெற்றுக்கொடுக்கவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சினிமாத்துறையில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. துறைசார் பிரதிநிதிகள், அதிகாரிகள் சந்திப்பில் பங்கேற்றனர். திரையரங்குகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்தபோதும், நட்டத்தை எதிர்கொள்ளும் நிலை இயக்குனர்கள் மத்தியில் காணப்படுவதாக சந்திப்பின்போது குறிப்பிடப்பட்டது. இதேவேளை கடந்த அரசாங்கத்தில் சினிமாத்துறை இழந்த வரி நிவாரணத்தை மீள பெற்றுக்கொடுக்குமாறும் துறைசார் அதிகாரிகள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தனர்.