கொவிட் – 19 தொற்று பரிசோதனைக்கு அதிக நிதி தேவைப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிப்பு
Related Articles
கொவிட் – 19 தொற்று பரவலை தடுப்பதற்கான பரிசோதனைகளுக்கு 30 பில்லியனுக்கும் அதிக அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. நோய் தொற்றை தடுப்பதற்கான தடுப்பூசிகள், சிகிச்சைகள் என்பவற்றுக்கு நிதி தேவைப்படுகிறது. அடுத்த வருடத்திற்கும் இதற்கென நிதியொதுக்குவது அவசியமென உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது. 31.3 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி தற்போது செலவிடப்படுகிறது. உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொவிட் – 19 தொற்று பரவல் தொடர்ந்தும் நீடித்திருக்கும் அபாயம் காணப்படுகிறது.
இதனால் நோய் தொற்றுக்கான சிகிச்சைகளை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையினால் 3.4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.