fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜப்பானின் கிழக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 26, 2020 12:28

ஜப்பானின் கிழக்கு பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. சிபா மாகாணத்தில் ஏற்பட்ட நிலஅதிர்வால் வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் குலுங்கியன. இதனால் மக்கள் அச்சமடைந்த நிலையில், வீதிகளில் தஞ்சமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பூமிக்கடியில் 30 கிலோ மீற்றர் ஆழத்தில் நில அதிர்வின் மையப்புள்ளி பதிவாகியுள்ளது. 5 நிமிடங்களுக்கும் மேலாக நிலஅதிர்வு நீடித்ததாக ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நில அதிர்வால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேதங்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 26, 2020 12:28

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க