fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இணையத்தள கருத்துக்கணிப்பில் சச்சினை வீழ்த்தி, ராகுல் ட்ராவிட் முன்னிலை

ITN News Editor
By ITN News Editor ஜூன் 26, 2020 12:23

கடந்த 50 வருடங்களில் இந்தியாவின் சிறந்த டெஸ்ட் வீரராக ராகுல் ட்ராவிட் தெரிவாகியுள்ளார். விஸ்டன் இந்தியா பத்திரிக்கை இணையத்தள கருத்துக்கணிப்பை நடாத்தியது. அதில் சச்சின் டெண்டுல்கர், ஷெவாக், கங்குலி, ட்ராவிட், எம்.எஸ்.தோனி, விராட் கோஹ்லி உள்ளிட்ட 16 வீரர்கள் இடம்பிடித்திருந்தனர்.

கட்டம் கட்டமாக நடத்தப்பட்ட இணையத்தள கருத்துக்கணிப்பின் இறுதி தெரிவில் ராகுல் ட்ராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கருக்கிடையில் போட்டி நிலவியது. குறித்த இருவரில் சிறந்த வீரர் யார் என கணிக்கும் கருத்துக்கணிப்பில் 11 ஆயிரத்து 400 ரசிகர்கள் கலந்துகொண்டனர். 52 வீதமானோர் ராகுல் ட்ராவிட்டை தெரிவுசெய்தனர். 48 வீதமானோர் சச்சின் டெண்டுல்கரை தெரிவுசெய்தனர்.

அதற்கமைய முதலாம் இடத்தை ராகுல் ட்ராவிட்டும், இரண்டாம் இடத்தை சச்சின் டெண்டுல்கரம், மூன்றாம் இடத்திற்கு விராட் கோஹ்லியும் தெரிவாகினர். ராகுல் ட்ராவிட் தனது விளையாட்டு வாழ்க்கையில் சிறப்பாக துடுப்பெடுத்தாடியதால் வாக்கெடுப்பில் முன்னிலைப்பெற்றுள்ளதாக விஸ்டன் இந்தியா பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 26, 2020 12:23

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo