fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் போதைப்பொருள் வர்த்தகர் பலி

ITN News Editor
By ITN News Editor ஜூன் 26, 2020 10:13

கம்பஹா பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் போதைப்பொருள் வர்த்தகரொருவர் உயிரிழந்துள்ளார். கெடவலப்பிட்டிய சம்பத் எனப்படும் போதைப்பொருள் வர்த்தகரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மிரிஸ்வத்த பொலிஸ் வீதி சோதனை சாவடியில் சந்தேக நபர் பயணித்த வாகனத்தை நிறுத்துமாறு பொலிஸார் சமிக்ஞை வழங்கியுள்ளனர்.

எனினும் குறித்த நபர் பொலிஸாரின் எச்சரிக்கையை மீறி வாகனத்தை செலுத்தியுள்ளார். அதனையடுத்து பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபரை பின்பதொடர்ந்துள்ளனர். இந்நிலையில் சந்தேக நபர் பொலிஸார் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளார். பொலிஸாரின் பதில் தாக்குதலில் சந்தேக நபர் உயிரிழந்துள்ளார். இன்று காலை 05.00 மணியளவில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபரிடமிருந்து கைத்துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 26, 2020 10:13

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க