fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

MCC மீளாய்வு குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் இன்று கையளிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 25, 2020 13:41

எம்.சி.சி மீளாய்வு குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்றைய தினம் கையளிக்கப்படவுள்ளது. இறுதி அறிக்கை நேற்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கப்பட்டது. பரிந்துரைகள் அடங்கிய குறித்த அறிக்கை அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படுமென பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. எம்.சி.சி.மீளாய்வு குழு கடந்த 6 மாதங்களாக எம்.சி.சி. உடன்படிக்கை தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுத்திருந்தது. பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் யோசனைகள் பெறப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை அனுமதியுடன் பிரதமரினால் குறித்த குழு நியமிக்கப்பட்டது. அதன் தலைவராக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீட ஆய்வுப்பிரிவின் பேராசிரியர் லலித்தசிறி குணருவன் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 25, 2020 13:41

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க