போதைப் பொருள் வர்த்தகத்தின் ஊடாக ஈட்டப்படும் சகல சொத்துக்களும் அரசுடமையாக்கப்படும்
Related Articles
போதைப் பொருள் வர்த்தகத்தின் ஊடாக ஈட்டப்படும் சகல சொத்துக்களும் அரசுடமையாக்கப்படுமென பொலிசார் தெரிவித்துள்ளனர். நிதிப்பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
அது குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசப்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் விசேட அதிரடிப்படை உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவு திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் சட்டவிரோத வர்த்தகங்கள் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.