fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சுரக்ஷா மாணவ காப்புறுதி : அடுத்தகட்ட பிரதிலாபங்கள் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்படும்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 23, 2020 17:09

சுரக்ஷா மாணவ காப்புறுதி வேலைத்திட்டத்தின் அடுத்தகட்ட பிரதிலாபங்கள் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்படுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வருட மே மாதம் 31ம் திகதிக்கு பின்னர், அமுலுக்கு வரும் வகையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்களை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் பிரதான காரியாலயத்திற்கோ அல்லது நாடு முழுவதிலும் உள்ள எந்தவொரு கிளைக்கோ நேரடியாக சென்று அல்லது தபால் மூலமாக ஒப்படைக்க முடியும். இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் 0112 35 73 57 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 23, 2020 17:09

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க