fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

போட்டி தடை விதிக்கப்பட்டிருந்த இந்திய வீரர் ஸ்ரீசாந்தின் தடை காலம் நிறைவு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 22, 2020 13:04

கிரிக்கட் சூதாட்டம் காரணமாக போட்டி தடை விதிக்கப்பட்டிருந்த இந்திய வீரர் ஸ்ரீசாந்தின் தடை காலம் நிறைவிற்கு வரவுள்ளது. அவரை கேரள கிரிக்கட் அணியில் இணைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2013ம் ஆண்டு இடம்பெற்ற ஐ.பி.எல். தொடரில் சூதாட்டத்தில் ஈடுப்பட்டதாக ஸ்ரீசாந் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதனையடுத்து, இந்திய கிரிக்கட் சபையினால் அவருக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட்டது. சூதாட்ட வழக்கை விசாரணை செய்த புதுடில்லி சிறப்பு நீதிமன்றம் 2015ம் ஆண்டில் ஸ்ரீசாந்தை விடுதலை செய்ய உத்தரவிட்டது.

எனினும் அவருக்கு ஆயுட்கால தடையை நீக்குவதற்கு இந்திய கிரிக்கட் சபை மறுப்பு தெரிவித்தது. இதனால் குறித்த தடையை நீக்குவதற்கு உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தார். இதனையடுத்து. ஸ்ரீசாந்தின் ஆயுட்கால தடை 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. இதற்கமைய, எதிர்வரும் செப்டம்பர் மாதத்துடன் அவருக்கு எதிரான போட்டி தடை நிறைவிற்கு வரவுள்ளது. ராஞ்சி கிரிக்கட் போட்டிக்கான கேரளா அணியில் ஸ்ரீசாந்தை இணைத்து கொள்வதற்கு தயாரொன கேரளா மாநில கிரிக்கட் சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 22, 2020 13:04

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க