வட மாகாண அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.
வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது. பாராளுமன் தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் சுகாதார நடைமுறைகள், வாக்களிப்பு நிலையங்கள், தாபால் மூல வாக்களிகப்புக்கான ஒழுங்குகள் தேர்தல் தொடர்பான முன் ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஆணைக்குழுவின் உறுப்பினரான ரட்னஜீவன் ஹூல் ஆகியோர் கலந்துரையாடினர். இக்கலந்துரையாடலில் வவுனியா யாழ்பாணம் மன்னார் முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களின் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் பொலீஸ் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொணண்டனர்.
(பிரசார நடவடிக்கைகளில் தேர்தல் ஆணைக்குழு முட்டுக்கட்டை போடவில்லை. 1981 ஆம் ஆண்டின் பாராளுமன்ற தேர்தல் விதிமுறைகளின் கீழ் பாதாதைகள் புகைப்படங்கள் சுவரொட்டிகள் போன்றவற்றை காட்ச்சிப்படுத்த முடியாது. பணம் செலவலித்து வானொளி தொலைக்காட்சி பத்தரிகை பிரசாரங்களை மேற்கொள்வது தடுக்க முடியாது. தேர்தல்களில் போட்டியிடும் அணைத்து வேட்பாளர்களுக்கும் ஊடகங்களில் வாய்ப்பு வழங்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம். தேர்தல் அலுவலகங்களில் சுயேட்சைக்குழுவின் போட்டியிடும் குழுவின் கட்சியின் பெயர் சின்னம் போன்றவற்றை காட்சிப்படுத்தலாம். கூட்டங்கள் நடைபெறும் தினத்தில் கூட்டம் நடைபெறும் இடத்தில் மாத்திரமே பாதாதைகளை காட்சிப்படுத்தலாம். )