கொவிட் 19 வைரஸ் அச்சுருத்தல் படிப்படியாக நீங்கி வரும் நிலையில் தற்போது டெங்கு நோயின் அச்சுறுத்தல் தலைதூக்கியுள்ளது. அக்கரைப்பற்று நகர் பிரிவு 3 மற்றும் 5 ஆம் பிரிவுகளில் டெங்கு நோய்நோயினால் பாதிக்கப்பட்ட 3 நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும்
டெங்கு நோய் தடுப்ப பிரிவினர் வீடு வீடாக சென்று சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 80 பேர் இதில் ஈடுப்பட்டனர். இப்பகுதிகளில் மேற்கொள்ளப்ப்ட்ட பரிசோதனைகளை தொடர்ந்தும் டெங்கு பரவும் வகையில் பிரதேசத்தில் தங்கி வந்த 3 குடும்பங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்ற சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பருஸா நக்பர் தலைமையில் இச்செயல்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் வகையில் சிரமதான பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். மட்டக்களப்ப மட்டிக்களி கிராம சேவக பிரிவிற்குட்ப்பட்ட பகுதிகளில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் அதிகாரி பிகே ஹெட்டியாராச்சி தலைமையில் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், மீனவர்கள், விளையாட்டு வீரர்கள், ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்