ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் 99 பேரை கட்சியில் இருந்து வெளியேற்றவதற்கு அக்கட்சியின் செயற்குழு மேற்கொண்ட தீர்மானத்தை நடைமுறைபடுத்துவதை தடுக்கும் வகையில் உத்தரவு ஒன்றை பிறப்பிப்பதற்கு கொழுப்பு மாவட்ட நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் உப தலைவர் ரவி கருனாநாயக்க விற்கும் அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரன்ஜித் மத்தும பண்டார இம்மனுவை தாக்கல் செய்துள்ளார். தாம் உட்பட கட்சி உறுப்பினர் 99 பேரின் உரிப்பரிமை இரத்துசெய்யப்பட்டிருப்பதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தீர்ப்பாயம் அறிவித்த கொழும்பு மாவட்ட நீதிமதி திருமதி அமாலி ரணவீர இது போன்ற தடை உத்தரவை கோரும் போது முறைப்பாட்டாளர் உண்மையை உரிய முறையில் நீதிமன்றத்தில் தெரிவிக்க்க வேண்டுமென தெரிவித்தார். ஆனால் முறைப்பாட்டாளர் விடயங்களை மூடி மறைது தடை உத்தரவை கோரயியிருப்பதாக நீதிபதி தெரிவித்தார். வழக்கிளை எதிர்வரும் ஜூலை 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிபதி பிரதிவாதிகளான கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உபதைலைவர் ரவி கருனாநாக்க ஆகியோருக்கு அழைப்பானை விடுக்குமாறு உத்தரவிட்டார்.
இன்று முதல் 2 வாரங்களுக்குள் ஆட்சேபனைகள் காணப்பட்டால் அதனை சமர்பிக்குமாறு பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள் ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.
முறைப்பாட்டாளரான ரன்ஜித் மத்தும பண்டார தனது முறைப்பாட்டில் தான் உட்பட சிலர் ஐக்கிய மக்கள் சக்தி எனப்படும் முன்னனி ஒன்றின் மூலம் வேட்பு மனு தாக்கல் செய்ததன் பின்னர் தம்மை கட்சியில் இருந்து வெளியேற்றி ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள பிரதிவாதிகள் தீர்மானித்திருப்பதாக தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி செயற்குழுவின் தீர்மானத்தின் அடிப்படையிலே குறித்த முன்னனி உருவாக்கப்பட்டதாகவும் இதனால் ஐக்கிய தேசிய கட்சியின் யாப்பு எந்தவகையிலும் மீரப்பவில்லை எனவும் தெரிவித்தார். ஆகவே தங்களுக்க எதிராக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதுதற்று ஐக்கிய தேசிய கட்சி செயற்குழு மேற்கெகாண்ட தீரமானம் சட்டத்திற்கு முரானானது என அறிவித்து தமது கட்சி உரிப்பரிமையை இரத்து செய்வதற்கு மேற்கொள்ளப்பட் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் வகையலில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு மத்தும பண்டார தெரிவித்திருந்தார்.
பிரதிவாதியான அகில விராஜ் காரியவசம் தனது ஆட்சேபனையில் ஐக்கிய மக்கள் சக்தி எனும் கட்சி ஒன்றை உறுவாக்கவதற்கு தமது கட்சியின் செயற்குழு அனுமதி வழங்க வில்லையென தெரிவித்தார். பிரதிவாதியான ரன்ஜித் மத்தும பண்டார உள்ளிட்டவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கத்துவம் பெற்று கட்சியின் மூலம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் அவர்களுக்க ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பனராக இருப்பதற்கு எவ்வித தகுதியும் இல்லையென அகிலவிராஜ் காரியவசம் நீதிமன்றத்தில் கூறினார். கட்சி யாப்பு மீரப்பட்டமை தொடர்பில் இவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் அதை தடுக்கும் வகையில் உத்தரவு ஒன்று பிரப்பிக்கப்பட்டால் அதனால் பெறும் பாதிப்புக்கள் ஏற்படலாமென குறிப்பிட்டார்.