தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் ஒருநாள் சேவை இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலையடுத்து ஒருநாள் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. நாளை முதல் முதற்கட்டமாக பத்தரமுல்லையிலுள்ள பிரதான அலுவலகத்தில் நாளொன்றுக்கு 250 பேருக்கும், காலியிலுள்ள அலுவலகத்தினூடாக 50 பேருக்கும் தேசிய அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டை பெறுபவர்கள் தங்களது விண்ணப்பங்களை கிராம சேவை அதிகாரியிடம் உறுதிப்படுத்தி பிரதேச செயலகத்தில் கையளிக்க வேண்டும். பிரதேச செயலகத்தில் பொருத்தமான திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கீடு செய்து இலக்கமொன்றை பெற்றுக்கொண்டு, குறித்த திகதியில் திணைக்களத்திற்கு சமூகமளித்து அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியுமென ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
காய்ச்சல், தடிமன், தலைவலி போன்ற நோய் அறிகுறிகள் இருக்குமாயின் தேசிய அடையாள அட்டைக்கான ஒருநாள் சேவை பெற்றுக்கொள்வதற்கு வருகைத்தருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு ஆட்பதிவு திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.