விளக்கமறியலில் உள்ள போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய சிறைக் கைதிகளுக்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மஹர மற்றும் மாத்தறை சிறைச்சாலைகளில் பணியாற்றிய அதிகாரிகளே பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிறைக்கைதிகளுக்கு தொலைபேசிகளை வழங்கி உதவியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த இரு அதிகாரிகளையும் மேலதிக விசாரணைகளுக்கென பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல் தெனிய தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை காவலர்கள் இருவர் பதவி நீக்கம்
படிக்க 0 நிமிடங்கள்