fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உலகளவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 90 இலட்சத்தை அண்மிக்கிறது

ITN News Editor
By ITN News Editor ஜூன் 21, 2020 18:13

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 90 இலட்சத்தை எட்டவுள்ளது. இதுவரை, 89 இலட்சத்து 21 ஆயிரத்து 385 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இவர்களில் 47 இலட்சத்து 43 ஆயிரத்து 11 பேர் குணமடைந்துள்ளனர். 4 இலட்சத்து 66 ஆயிரத்து 848 பேர் மரணித்துள்ளனர். அமெரிக்காவிலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு, 23 இலட்சத்து 30 ஆயிரத்து 578 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. அவர்களில் ஒரு லட்சத்து 980 பேர் மரணித்துள்ளனர்.

மிக வேகமாக வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு வரும் பிரேசிலில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 968 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. 50 ஆயிரத்த 58 பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். 10 இலட்சத்து 70 ஆயிரத்து 139 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். ரஷ்யாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 80 ஆயிரத்தை எட்டவுள்ளது. எண்ணாயிரத்து 2 மரணங்கள் சம்பவித்துள்ளன.

இந்தியாவில் 4 இலட்சத்து 11 ஆயிரத்து 727 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதோடு, அவர்களில் 13 ஆயிரத்து 277 பேர் மரணித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அங்கு, கடந்த 24 மணித்தியாலயத்தில் மாத்திரம் 15 ஆயிரத்து 413 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதோடு, 306 மரணங்களும் பதிவாகியுள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 21, 2020 18:13

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க