fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொவிட் – 19 வைரஸ் பரவலுக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சார களத்தில்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 21, 2020 14:35

அமெரிகக் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒக்லஹோமாவில் நேற்று இடம்பெற்றுள்ளது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டதாக அந்நாட்டு தகல்கள் தெரிவிக்கின்றன. கொவிட் – 19 தொற்று பரவல் மத்தியிலும் தேர்தல் பிரச்சார கூட்டங்கள் அமெரிக்காவில் இடம்பெற்று வருகின்றன. ஒக்லஹோமாவின் துல்சா நகரில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் பலர் கலந்துகொண்டதால் தொற்று பரவல் அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு சுகாதார திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சுமார் 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்கும் வகையில் தேர்தல் பிரச்சார கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டம் ஆரம்பமாவதற்கு சில மணித்தியாலத்திற்கு முன்னர் ஜனாதிபதி ட்ரம்பின் பிரச்சார பணியாளர்கள் தமது குழுவை சேர்ந்த 6 பேருக்கு கொவிட் – 19 தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குறித்தும் கவனம் செலுத்தவேண்டுமென சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை எதிர்வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி ட்ரம்பை எதிர்த்து, ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் உப ஜனாதிபதி ஜோ பைடன் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 21, 2020 14:35

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க