fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சட்டவிரோதமான முறையில் கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டிய 2 பேர் கைது

ITN News Editor
By ITN News Editor ஜூன் 20, 2020 10:09

யாழ். நாவாந்துறைப் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக கால்நடைகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்களுக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கமைய இன்று காலை பொது சுகாதார பரிசோதகர்கள் அப்பகுதி பொது மக்களுடன் இணைந்து இறைச்சி வெட்டப்படும் இடத்தினை முற்றுகையிட்டனர். இதன்போது 520 கிலோ கிராம் மாட்டிறைச்சி மீட்கப்பட்டுள்ளதுடன், இறைச்சிக்காக வெட்டுவதற்கு தயாராக கட்டி வைத்திருந்த கால்நடைகள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 20, 2020 10:09

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க