fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரோனாவை கட்டுப்படுத்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சீனா பாராட்டு..

ITN News Editor
By ITN News Editor ஜூன் 20, 2020 07:12

இலங்கையில் கொரோனாவை கட்டுப்படுத்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சீனா பாராட்டு தெரிவித்துள்ளது. சீன ஜனாதிபதி ஷி.ஜிங்.பிங் ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த சீனா பல்வேறு ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தது. மருத்துவ உதவிப்பொருட்கள் சீனாவினால் வழங்கப்பட்டதுடன் நிவாரண உதவிகளை வழங்கவும் சீனா இணக்கம் வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேர்த்தியான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தார். சுகாதார துறையினருடன் பாதுகாப்பு துறையினரும் இணைந்து செயற்பட்டதன் மூலம் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடிந்ததாக சீனா குறிப்பிட்டுள்ளது. இதேவேளை இன்றைய தினம் பிறந்த நாளை கொண்டாடும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சீனா ஜனாதிபதி ஷி.ஜிங்.பிங் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சர்வமத தலைவர்களும் ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். யுத்தத்தை வெற்றிகொள்ள அளப்பெரிய பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையின் நகரங்களை அபிவிருத்தி செய்யவும் முன்னின்று செயற்பட்டவர். அவர் பாதுகாப்பு செயலாளராக இருந்த காலப்பகுதியில் குறித்த பணிகளை மேற்கொண்டார். அவர் மீது பொதுமக்கள் நம்பிக்கை வைத்ததன் காரணமாக கோட்டாபய ராஜபக்ஷவை இந்த நாட்டின் தலைவராக தெரிவுசெய்துள்ளனர். நாட்டிற்கு சிறந்த தலைவர் கிடைத்துள்ளார். அவரது செயற்பாடுகள் வெற்றிபெறவும் நோயற்ற வாழ்வுடன் நீடூழி வாழவும் வாழ்த்துவதாக பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அங்கரஹாரே கஷ்ஷப்ப நாயக்க தேரர், சிவ ஸ்ரீ பாபுஷர்மா குருக்கள் , கலாநிதி ஹசன் மௌலான, அருட் தந்தை எக்ஸ்.என்.குருக்குல சூரிய ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சிவ ஸ்ரீ பாபுஷர்மா குருக்கள் ஜனாதிபதியின் பிறந்த நாளை முன்னிட்டு வசந்தம் செய்தி பிரிவிக்கு ஆசியுரை வழங்கினார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 20, 2020 07:12

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க