fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கையின் கொரோனா ஒழிப்பு செயற்பாடுகளுக்கு இந்தியா பாராட்டு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 18, 2020 17:20

இலங்கையின் கொரோனா ஒழிப்பு செயற்பாடுகளை இந்தியா பாராட்டியுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்த்தானிகார் கோபால் பாக்லே மற்றும் அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சிக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் மற்றும சுகாதார பிரிவினர் கொரோனாவை கட்டுப்படுத்த முன்னெடுத்துவரும் செயற்பாடுகளை அவர் வரவேற்றுள்ளார். அதேபோல் சுகாதார அமைச்சர் வழங்கிய ஒத்துழைப்பும் இங்கு விசேடமாக பாராட்டப்பட்டதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க இந்திய அரசாங்கம் தயாராகவுள்ளதாக உயர்ஸ்த்தானிகர் இங்கு குறிப்பிட்டார். இதேவேளை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்தியா வழங்கிய ஒத்துழைப்பிற்கும் அரசாங்கமும் மக்களும் நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சி இதன்போது தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 18, 2020 17:20

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க