fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஹிருணிக்காவுக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை

ITN News Editor
By ITN News Editor ஜூன் 17, 2020 11:45

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேம சந்திரவை எதிர்வரும் ஜூலை மாதம் 10 ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜனாகி ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார். கடந்த 2015 ம் ஆண்டு இளைஞன் ஒருவனைக் கடத்திச் சென்று சட்டவிரோதமாக தடுத்து வைத்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்றைய வழக்கு விசாரணையின் போது ஹிருணிக்கா பிரேமசந்திரவோ அவரது சட்டத்தரணியோ நீதிமன்றில் ஆஜராகியிருக்கவில்லை. அதற்கமைவாகவே எதிர்வரும் 10 ம் திகதி நீதிமன்றில் ஆஜராக அவருக்கு அழைப்பாணை விடுக்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 17, 2020 11:45

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க