fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

திட்டமிட்ட வகையில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 16, 2020 16:19

ஒலிம்பிக் போட்டிகளை திட்டமிட்ட வகையில் பாதுகாப்புடன் நடத்த தீர்மானிக்கப்பட்டது. எதிர்வரும் ஜூலை மாதம் 24ம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 9ம் திகதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் போட்டிகளை நடத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக போட்டி அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்வருடம் போட்டியை நடத்துவதில் சிக்கல் நிலைக்காணப்படுவதால் அடுத்த வருடம் ஒத்திவைக்கப்பட்ட போட்டி திட்டமிட்டப்படி நடைபெறுமென டோக்கியோ தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கான பாதுகாப்பு நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஒத்திவைக்கப்பட்ட போட்டிகளை மீள நடத்த சுமார் 800 மில்லியன் செலவாகுமென சர்வதேச ஒலிம்பிக்குழு மதிப்பட்டுள்ளது. இதேவேளை ஒலிம்பிக் போட்டிகளுக்கென ஜப்பான் அரசாங்கம் சுமார் 12.6 பில்லியன் டொலரை செலவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 16, 2020 16:19

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo