2021ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 28ம் திகதி அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நிகழ்வு இடம்பெறயிருந்தது. எனினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விருது விழா 2021ம் ஆண்டு ஏப்ரல் 25ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சர்வதேச ரீதியில் சினிமா துறையில் பல்வேறு பிரிவுகளில் திறமையை வெளிப்படுத்துவர்களுக்கென ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.