fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரோனா : இலங்கையில் தற்போதைய நிலவரம்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 16, 2020 14:09

நாட்டில் தற்போது ஆயிரத்து 905 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஆயிரத்து 342 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 552 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றைய தினம் 16 கொரொனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில் 13 பேர் வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர்கள் எனவும் ஏனைய 3 பேரும் கடற்படையை சேர்ந்தவர்கள் எனவும் அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 179 பேர் இன்றைய தினம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்களென இராணுவம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய இலங்கையில், இதுவரை 14 ஆயிரத்து 97 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ச்சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதனிடையே கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த கடற்படை வீரர்கள் 22 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். வெலிகந்த, மினுவாங்கொட மற்றும் ஹோமாகம ஆகிய வைத்தியசாலைகளில் இருந்து அவர்கள் வெளியேறியுள்ளனர். தற்போது வரை 734 கடற்படை வீரர்கள் குணமடைந்து வெளியேறியுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு வெளியேறிய அனைவரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 16, 2020 14:09

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க