மேல்மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 902 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருளை வைத்திருந்தவர்கள் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கைதானவர்களில் 387 பேரிடமிருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் 515 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தவர்கள் என மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேல்மாகாணத்தில் 902 பேர் கைது..!
படிக்க 0 நிமிடங்கள்