fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கட்டுகுருந்த கடலில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு…

ITN News Editor
By ITN News Editor ஜூன் 15, 2020 15:05

களுத்துறை – கட்டுகுருந்த கடலில் நீராட சென்ற காணாமல்போன இளைஞனின் சடலம் இன்று காலை கண்டுப்பிடிக்கப்பட்டது. பயாகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லன்சியா வத்த பகுதியில் கடலில் மிதந்துகொண்டிருந்த நிலையில், பிரதேசவாசிகள் சடலத்தை அடையாளம் கண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நேற்றைய தினம் கடலில் நீராட சென்ற இளைஞர்கள் 6 பேரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போனார். இளைஞரை தேடும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தன. இதேவேளை, உயிரிழந்த இளைஞர் இன்றைய தினம் திருமண பந்தத்தில் இணைய இருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 15, 2020 15:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க