fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பொலிவூட் நடிகர் சுசாந்த் சிங்கின் மரணம் தொடர்பில் மும்பை பொலிஸார் விசாரணை

ITN News Editor
By ITN News Editor ஜூன் 15, 2020 11:19

பொலிவூட் நடிகர் சுசாந்த் சிங்கின் மரணம் தொடர்பில் மும்பை பொலிஸார் விசாரணை

இந்தியாவின் பொலிவூட் திரைப்பட நடிகர் சுசாந்த் சிங்கின் மரணம் தொடர்பில் மும்பை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்றைய தினம் மும்பையில் உள்ள வீட்டில் சுசாந்த் சிங் தூங்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். ஊரடங்கு காலத்தில் குறித்த வீட்டில் தனிமையில் இருந்து வந்த அவர், தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்நிலையில், சுசாந்த் சிங்கின் உயிரிழப்பு குறித்து அவரது உறவினர், நெருங்கிய நண்பர்கள், அயல் வீட்டார் ஆகியோரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 34 வயதான சுசாந்த் சிங்கின் இழப்பு கவலையடையச் செய்துள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 15, 2020 11:19

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo