fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

IPL போட்டி தொடரை இலங்கையில் நடத்த முடியுமா ?.. சுனில் கவாஸ்கர்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 15, 2020 11:10

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி தொடரை இலங்கையில் நடத்த முடியுமென இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக மார்ச் மாதம் நடைபெறவிருந்த 2020 இற்கான ஐபிஎல் போட்டி தொடர் காலவரையறை இன்றி ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. இதனால் எதிர்வரும் ஒக்டோம்பர் மாதம் வரை எந்தவொரு கிரிக்கட் போட்டிகளையும் நடத்தக்கூடிய சூழல் இல்லையென சுனில் கவாஸ்கர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, உலக கிண்ண 20 – 20 கிரிக்கட் தொடரை ரசிகர்கள் இன்றி நடத்த முடியுமென அவுஸ்ரேலிய அரசு அண்மையில் அறிவித்தது. குறித்த போட்டி தொடர் திட்டமிட்டப்படி நடைபெறும் பட்சத்தில் ஒக்டோம்பர் மாதத்திற்கு பின்னர் ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்துவது சிக்கல்களை உருவாக்கும். குறித்த காலப்பகுதி பருவபெயர்ச்சி காலமாக இருப்பதே அதற்கு காரணமாகும். இதனால் இந்தியாவில் போட்டி தொடரை நடத்தாது அதனை இலங்கையில் நடத்த முடியுமென சுனில் கவாஸ்கர் யோசனை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 15, 2020 11:10

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo