2020 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம்
Related Articles
2020 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நிகழவுள்ளது. காலை 9.15 மணி முதல் பிற்பகல் 3.4 மணி வரை 6 மணித்தியாலங்களுக்கு சூரிய கிரகணம் நீடிக்குமென சிரேஷ்ட பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். நெருப்பு வளைய சூரிய கிரகணமாக இது பெயரிடப்பட்டுள்ளது.
இலங்கை மக்களுக்கு அரை சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியுமென பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார். இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும். இந்நிலையில், வெற்று கண்களால் கிரகணத்தை அவதானிக்க வேண்டாமென ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.