fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வைத்திய பீட மாணவர்களுக்கான இறுதியாண்டு பரீட்சை நாளை ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 14, 2020 12:47

அரச பல்கலைகழகங்களில் வைத்திய பீட மாணவர்களுக்கான இறுதியாண்டு பரீட்சை நாளை ஆரம்பமாகுமென பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி மாணவர்களை பரீட்சைக்கு அமர வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செயல்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் எண்ணிக்கையும் சுகாதார வழிமுறைகளுக்கு அமைய தீர்மானிக்கப்படுமென ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். பரீட்சைக்கு வருகைதரும் மாணவர்கள் முடிந்தளவு தமது வீடுகளில் இருந்தே வருகைதருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சகல பல்கலைகழக உபவேந்தர்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மீள் அறிவித்தல் வரும் வரை இரவு 7 மணிக்கு பின்னர் எந்தவொரு மாணவரும் பல்கலைகழக வளாகத்தில் நடமாட அனுமதி வழங்கப்படமாட்டாது. பட்டப்படிப்பு மற்றும் ஆராச்சி மாணவர்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லமுடியும். எந்தவொரு காரணத்திற்காகவும் பல்கலைகழகத்திற்கு உள்ளேயோ அல்லது வெளி புறத்திலோ ஒன்றுகூட அனுமதி வழங்கபடமாட்டாது. விளையாட்டு மற்றும் ஏனைய விடங்களுக்கும் அனுமதி வழங்கபடமாட்டாதெமன பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இதேவேளை, பல்கலைகழகங்களின் ஏனைய பீட மாணவர்களுக்கான இறுதியாண்டு பரீட்சை எதிர்வரும் 22ம் திகதி ஆரம்பமாகும். ஆகஸ்ட் 15ம் திகதிக்கு முன்னர் சகல பரீட்சை நடவடிக்கைகளையும் நிறைவு செய்யவேண்டும். இதேவேளை, சகல பல்கலைகழக நிர்வாக அதிகாரிகளும் நாளைய தினம் கடமைக்கு திரும்ப வேண்டுமெனவும் பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 14, 2020 12:47

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க