fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பொதுத்தேர்தல் கண்காணிப்பு பணிகள் ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 13, 2020 16:30

பொதுத்தேர்தல் கண்காணிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கமைய அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் நீண்டகால கண்காணிப்பாளர்கள் 160 பேர் முதற்கட்டமாக சேவையில் ஈடுபட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரங்களில் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் நீண்டகால கண்காணிப்பாளர் ஒருவர் வீதம் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் இடம்பெறும் தேர்தல் பணிகளை கண்காணிப்பதற்கென 5 ஆயிரம் பேரை சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் தெரிவித்துள்ளார். சுகாதார வழிமுறைகளை பின்பற்றி, அவற்றை முன்னெடுப்பது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுடன், கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 13, 2020 16:30

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo