fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எதிர்வரும் 22 ஆம் திகதி பல்கலைக்கழக 4 ஆம் வருட மாணவர்களின் பரீட்சைகள் ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 13, 2020 12:20

அனைத்து பல்கலைக்கழகங்களும் எதிர்வரும் 22ம் திகதி இறுதியாண்டு மாணவர்களின் பரீட்சைக்காக மீள திறக்கப்படவுள்ளதாக உயர்கல்வியமைச்சு அறிவித்துள்ளது. குறித்த பரீட்சைகள் அனைத்தும் ஓகஸ்ட் மாதம் 15ம் திகதிக்கு முன்னர் நிறைவுசெய்யப்படவேண்டுமென உயர்கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று முற்பகல் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் வளாகத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போதே பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டது. சுகாதார வழிமுறைகளுக்கமைய பரீட்சைகளை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள் மற்றும் உபவேந்தர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகங்களின் இறுதியாண்டு மாணவர்களின் பரீட்சைகளை நடாத்துவது தொடர்பில் முதற்கட்ட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் பரீட்சைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

 

 

 

ITN News Editor
By ITN News Editor ஜூன் 13, 2020 12:20

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க