உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 77 இலட்சத்தை கடந்துள்ளது
Related Articles
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 77 இலட்சத்தை கடந்துள்ளது. 77 இலட்சத்து 58,ஆயிரத்து 669 பேர் சர்வதேச ரீதியில் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 4 இலட்சத்து 28 ஆயிரத்து 650 பேர் உயிரிழந்துள்ளனர். 39 இலட்சத்து 75ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளனர்.
கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்தும் முன்னிலையில் உள்ளது. அங்கு 21 இலட்சத்து 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு இலட்சத்து 16 ஆயிரத்தி;ற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பட்டியலில் இரண்டாவது இடத்திலுள்ள பிரேசிலில் 8 இலட்சத்து 29 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 41 ஆயிரத்துக்கும் அதிக உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.