fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இடைநிறுத்தப்பட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் பல மீள ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 13, 2020 11:49

கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் பல தொடர்ந்தும் இரத்து செய்யப்பட்டுள்ளன. ஒரு சில போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் மேலும் பல போட்டிகள் முற்றாக ரத்து செய்யப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்றினால் உலகம் முழுவதும் 4 இலட்சத்து 23 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 7.5 மில்லியன் மக்கள் நோய்த் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் பாரியளவில் நடைபெறவிருந்த சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் பல இரத்தாகியுள்ளன.

இவ்வருடம் ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெறவிருந்த ஒலிம்பிக்போட்டிகளும் அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அடுத்த வருடம் ஜூலை மாதம் 23 ம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 8 ம் திகதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுமென சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவித்திருந்தது.

இதேவேளை கொவிட் 19 தொற்றினால் உலக நாடுகளில் அமுலில் இருந்த ஊரடங்கு சட்டம் தற்போது தளர்த்தப்பட்டு வருகிறது. இதன் விளைவாக ஒரு சில விளையாட்டுப் போட்டிகளை ரசிகர்களின்றி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒரு சில கால் பந்து போட்டிகளும் வாகன பந்தய போட்டிகளும் ஆரம்பமாகியுள்ளதாக சர்வதேச விளையாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 13, 2020 11:49

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க