fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

முச்சக்கர வண்டி சங்க தலைவர் கொலை சந்தேக நபர்களை இனங்காண அடையாள அணிவகுப்பு (video)

ITN News Editor
By ITN News Editor ஜூன் 12, 2020 20:02

தேசிய முச்சக்கர வண்டிகள் சாரதிகள் சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்த்தனவை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் 8 பேரையும் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 25 ம் திகதி குறித்த 8 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக வழங்கப்பட்ட லீசிங் நிவாரணத்தை தமது சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் பெற்றுக்கொடுப்பதற்கு தலையீடுகளை மேற்கொண்டமையினால் சுனில் ஜயவர்த்தன தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.

இதேவேளை லிசிங் நிறுவனமொன்று, தம்முடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் நபருக்கு தாக்குதல் நடத்த முடியாதென ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர்.டி.சில்வா தெரிவித்துள்ளார். குறித்த லீசிங் நிறுவனம் பதிவு செய்யப்படாது, வர்த்தகத்தை முன்னெடுத்து சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. அரசாங்கத்தினால் தற்போது நிவாரண காலம் வழங்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு வாகனத்தை எடுத்துசென்றமை கொள்ளை சம்பவமாகவே கருதப்படுமென அவர் குறிப்பிட்டார்.

உயிரிழந்த சுனில் ஜயவர்த்தனவில் தேகம் தற்போது கெஸ்பேவ தானயாம பிரதேசத்திலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதோடு அவரது இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.

 

ITN News Editor
By ITN News Editor ஜூன் 12, 2020 20:02

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க