fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

முன்னிலை சோசலிச கட்சி பொலிஸாருக்கு எதிராகவும் மக்கள் முன்னிலை சோசலிச கட்சிக்கு எதிராகவும் மனித உரிமை ஆணைக்குழு முறைப்பாடு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 12, 2020 19:44

முன்னிலை சோசலிச கட்சியின் அங்கத்தவர்கள் சிலர் இன்று மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளனர். இதேவேளை கொரோனா தொற்றுக்கு மத்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த சென்ற பொலிஸ் அதிகாரிகளின் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக சிவில் அமைப்புக்கள் முறையிட்டுள்ளன.

அமெரிக்க தூதரகம் மற்றும் நகர மண்டபத்தில் அருகில் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் செயல்பட்ட விதம் காரணமாக மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்துஇவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு மத்தியில் ஆணைக்குழுவிற்குள் சென்று முறைப்பாட்டை ஒப்படைப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக மின்னஞ்சல் மற்றும் தொலைநகல் மூலம் முறைப்பாடு செய்யுமாறு மனித உரிமை ஆணைக்குழு ஆலோசனை வழங்கியதாக முன்னிலை சோசலிச கட்சி தெரிவித்துள்ளது.

இதேவேளை தற்போது நாட்டில் லொக்டவுன் நீக்கப்பட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் ஒரு சிலர் அரசியல் ஆதாயத்திற்காக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு மக்களின் மனித உரிமைகளை ம’Pறுவதாக சிவில் அமைப்பின் செயல்பாட்டாளர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். அத்துடன் இவ்வார்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த முயன்ற பொலிஸ் அதிகாரிகளின் மனித உரிமைகள் மீறப்பட்டிருப்பதாகவும் அவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர் .இம்முறைப்பாடுகளைமின்னஞ்சல் மற்றும் தொலைநகல் மூலம் அனுப்புமாறு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 12, 2020 19:44

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க