அதிவேக வீதி பஸ் வண்டிகளில் அறவிடப்படும் கட்டணம் தொடர்பில் முறைப்பாடு
Related Articles
அதிவேக வீதிகளில் பயணிக்கும் அதிசொகுசு பஸ் வண்டிகளில் அறவிடப்படும் கட்டணம் பயணிகளால் ஏற்றுக்கொள்ளமுடியாதுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு பொருத்தமான பரிந்துரைகளை முன்வைக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பயணிகளை அசௌகரியங்களுக்கு உள்ளாக்க அரசாங்கம் இடமளிக்காதென அமைச்சர் சுட்டிக்காட்டினார். போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு குறிப்பிட்டார். தரமான வகையில் உயர்நிலையிலான பொது போக்குவரத்து சேவையை உருவாக்குவதே அரசாங்கம் நோக்கமென அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.