எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலுக்கா ஏக்கநாயக்க தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகியுள்ளார். அவர் விலகுவதற்கான கடிதம் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதோடு அதன் பிரதி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிலுக்கா ஏக்கநாயக்க மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநாரகாவும் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒரு வேட்பாளர் தேர்தல் போட்டியிலிருந்து விலகல்..
படிக்க 0 நிமிடங்கள்