fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

22 வது பொதுநலவாய விளையாட்டு போட்டி அட்டவணையில் மாற்றம்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 12, 2020 18:10

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 22 வது பொதுநலவாய விளையாட்டு போட்டி அட்டவணையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்ட தினத்திலிருந்து ஒரு நாள் தாமதமாக போட்டி ஆரம்பமாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 28 ம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 8 திகதி வரை போட்டியை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2022 ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் திகதி முதல் 24ம் திகதி வரை அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.

பொதுநலவாய போட்டிக்கான திகதியில் செய்யப்பட்ட மாற்றம், தடகள வீரர், வீராங்கனைகள் தங்களை தயார்படுத்தி கொள்வதற்கு சந்தர்ப்பமாக அமைந்துள்ளது. ஏற்கனவே பொதுநலவாய போட்டிக்கான திகதியாக அறிவிக்கப்பட்ட ஜுலை மாதம் 27ம் திகதி பெண்கள் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் அரை இறுதி ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. அதனையும் கவனத்திற் கொண்டு பொதுநலவாய போட்டிக்கான திகதியில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுநலவாய போட்டி ஏற்பாட்டு குழு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 12, 2020 18:10

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க