fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ETI நிதி நிறுவன முறைகேடுகளை கண்டறிவதற்கான குழு – ஜனாதிபதி சந்திப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 12, 2020 14:28

ஈடிஐ நிதி நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற முறைகேடுகளை கண்டறிவதற்கென நியமிக்கப்பட்ட குழு ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தது.

ஈடிஐ நிறுவனம் ஆரம்பம் முதல் முறையாக செயற்படவில்லையென விசாரணை குழு ஜனாதிபதியிடம் தெரிவித்தது. இந்நிறுவனத்தின் சொத்துக்கள் ஏனைய நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இவை மத்திய வங்கியின் எவ்வித கண்காணிப்பின் கீழும் இல்லையெனவும் குழு அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர். முறைகேடுகள் தொடர்பாக தொடர்ந்தும் கண்டறியுமாறு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுமக்களின் வைப்புக்களை துரிதமாக மீள செலுத்துவது குறித்து, கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அறிவித்தார். இடம்பெற்றதாக கூறப்படுகின்ற செயற்பாடுகள் குறித்த பொறுப்புக்களில் இருந்து விலகிச் செல்ல மத்திய வங்கிக்கு இடம் இல்லையென ஜனாதிபதி இக்குழு முன்னிலையில் சுட்டிக்காட்டினார்.

நிதி நிறுவனம் ஒன்றில் ஏதேனும் முறைகேடுகள் இடம்பெற்றால் வைப்பாளர்களை பாதுகாப்பதற்கு மத்திய வங்கிக்கு பொறுப்பு காணப்படுகின்றது. இப்பொறுப்பானது மத்திய வங்கியினால் நிறைவேற்றப்படவில்லையெனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் கே.ரி சித்ரசிறி மூவர் அடங்கிய குழுவின் தலைவர் ஆவார். ஓய்வு பெற்ற சொலிசிட்ட ஜெனரல் சுகத கம்லத் மற்றும் சிரேஷ்ட வங்கி அதிகாரியான டி.எம். குணசேக்கர ஆகியோர் இக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் ஆவர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 12, 2020 14:28

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க