fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உலக கிண்ண T – 20 கிரிக்கட் போட்டியை நடத்துவது தொடர்பில் இறுதி தீர்மானம்..

ITN News Editor
By ITN News Editor ஜூன் 12, 2020 10:01

உலக கிண்ண 20 – 20 கிரிக்கட் போட்டியை நடத்துவது தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லையென ஐ.சி.சி தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 18 ம் திகதிமுதல் நவம்பர் மாதம் 15 ம் திகதி வரை போட்டிகளை நடத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் தற்போதய கொரோனா வைரஸ் தொற்று நிலையைக் கருத்திற்கொண்டு போட்டியை நடத்துவதில் தொடர்ந்தும் சந்தேகமான சூழ்நிலை காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் தற்போது சுகாதார நிலை மேம்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் பயணக்கட்டுப்பாடு , தனிமைப்படுத்தல் விதிமுறைகள் அமுலில் உள்ளன. ரசிகர்களின்றி போட்டிகளை நடத்துவதற்கானே நிலையே தற்போது காணப்படுகிறது. குறித்தகாரணங்களால் உறுதியான தீர்மானமொன்றை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஐ.சி.சி அறிவித்துள்ளது. இதேவேளை உலக கிண்ண 20 – 20 போட்டிகள் ஒத்திவைக்கப்படும் பட்சத்தில், குறித்த காலப்பகுதியில் ஐ.பி.எல். தொடரை நடத்த இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை திட்டமிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 12, 2020 10:01

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க