fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

IPL கிரிக்கட் தொடரை இந்த ஆண்டு நடத்துவதற்கு ஏற்பாடுகள்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 11, 2020 18:49

ஐ.பி.எல். கிரிக்கட் தொடரை இந்த ஆண்டு நடத்துவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கட் சபைத் தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். கொவிட் 19 தொற்று காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த ஐ.பி.எல். கிரிக்கட் தொடரும் கால வரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்தியாவில் தொடர்ந்தும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கட் தொடரில் இந்திய வீரர்கள் மாத்திரமின்றி வெளிநாட்டு வீரர்களும் விளையாடுகின்றனர்.

இதேவேளை ஐ.பி.எல் போட்டித் தொடர் குறித்து இந்திய கிரிக்கட் சபைத் தலைவர் சௌரவ் கங்குலி முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு தொடரை நடத்த ஏற்பாடுகளும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ரசிகர்கள் இன்றி போட்டித் தொடரை நடத்துவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 11, 2020 18:49

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க