வாக்குச் சீட்டுக்கள் கம்பாஹா, யாழ்ப்பாணம், கொழும்பு, வன்னி, திகாமடுல்ல, மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தலில் நீளமான வாக்குச் சீட்டு 23 அங்குலம் கொண்டதாகவும் அகலமான வாக்குச் சீட்டு 9 அங்குலம் கொண்டதாகவும் அச்சிடப்பட்டுள்ளது. அதற்கமைய கம்பாஹா மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களுக்கு நீளமான வாக்குச் சீட்டு அச்சிடப்பட்டுள்ளதுடன், கொழும்பு, வன்னி, திகாமடுல்ல மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு அகலமான வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன.