சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் 2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆரம்பித்ததாக ஹவாட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளமை தொடர்பில் சீனா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் ஹூஹான் வைத்தியசாலையை அண்மித்த பகுதிகளில் அதிக சன நெரிசல் காணப்பட்டதாகவும் வூஹான் மக்கள் இருமல் மற்றும் மூச்சு திணறல் தொடர்பில் இணையதளத்தில் கூடுதல் தேடுதல்களை மேற்கொண்டுள்ளமை தொடர்பில் ஆராய்ந்து குறித்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக ஹவாட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர் செட்லைட் புகைப்படங்களை அவர்கள் ஆராய்ந்துள்ளனர். வைத்தியசாகை;கு அண்மித்த பகுதிகளில் காணப்பட்ட சன நெரிசலை கொண்டு இவ்வாறான தீர்மானத்திற்கு வர முடியாதென சீனா தெரிவித்துள்ளது.

சீனாவில் கொரோனா பரவல் 2019 ஓகஸ்ட் மாதம் ஆரம்பித்ததாக ஹவாட் பல்கலை ஆராய்ச்சியில் தகவல்
படிக்க 0 நிமிடங்கள்