fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சீனாவில் சீரற்ற வானிலை : 20 பேர் பலி

ITN News Editor
By ITN News Editor ஜூன் 11, 2020 13:16

சீனாவில் சீரற்ற வானிலை காரணமாக பெய்து வரும் கன மழையை அடுத்து ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் தென் மற்றும் மத்திய பகுதியிலேயே கன மழை பெய்து வருகின்றது. ஆறுகள் மற்றும் நீர்தேக்கங்கள் நிரம்பி வடிகின்றமையினால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. ஆயிரம் கனக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதோடு 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தில் சிக்குண்டவர்களை மீட்கும் பணிகளில் அந்நாட்டு பொலிஸார் மற்றும் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்குண்டு பலர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாகவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 11, 2020 13:16

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo